March 29, 2016
போராட்டத்தை திசைதிருப்ப முனைகிறதா தமிழ்நாடு?
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டும் – பிரசாரம் செய்து கொண்டும், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் அடிக்கின்ற கூத்து, நந்தவனத்து ஆண்டியைத் தான் நினைவுபடுத்துகின்றன. கடந்தவாரம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் உலகெங்கும் போலவே தமிழ்நாட்டிலும் அனுஷ்டிக்கப்பட்டது. சீமான் (fraud ) தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் கடலூரில் ஒரு பேரணி மற்றும் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டிருந்தார். அவரது வருகையை அறிந்து கொண்ட தமிழ்நாடு அரசு, அந்தப் பேரணிக்குத் தடைவிதித்தது. ஆனாலும் தடையை மீறி பொதுக்கூட்டம் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது. அதில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்று உரையாற்றியிருந்தார். அதில், அவர், ஈழத்தமிழர்களின் போராட்டமும், காஷ்மீர் மக்களின் போராட்டமும் ஒரே வகையானது என்றும், அந்தப் போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். கடலூர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் பங்கேற்றது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் ஏனைய கட்சிகள் அந்த விடயத்தில் வாய் திறக்காமல் இருந்து கொண்டன. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை நெடுங்காலமாகவே ஆதரிக்கும் பல கட்சிகள் அமைப்புகள் இருந்தாலும், அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தாமே விடுதலைப் புலிகளின் மறுவடிவம் போன்று செயற்படத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் தம்மை அரசியல் அமைப்பல்ல என்று கூறிவிட்டு, இப்போது ஆட்சியைப் பிடிக்கும் ஆவலில் தான் அரசியலுக்கு வந்ததாக கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார் சீமான். யாசின் மாலிக்கை கடலூர் கூட்டத்துக்கு அழைத்து வந்து பேச வைத்ததன் மூலம், தமிழ்நாடு அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புதிய அச்சத்துக்கு விதை போடப்பட்டுள்ளது. ஈழத்தமிழரின் ஆயுதவழிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இராஜதந்திர வழிமுறையிலேயே, அதுவும் இந்தியாவின் துணையுடன் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்தும் நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு இந்தியா பலவழிகளில் தடையாகவே இருந்தாலும், இந்தியாவை விலக்கியதாக ஒரு தீர்வு நடைமுறைச் சாத்தியமற்றது என்பது தமிழர்களால் வலுவாக உணரப்பட்டுள்ளது. முன்னர், இந்தியாவை விலக்கி வைக்க முயன்ற விடுதலைப் புலிகள் கூட, கடைசிக் காலகட்டத்தில் இந்தியாவின் தயவை நாடி நின்றனர் என்பதும் கவனத்துக்குரியது. இத்தகைய நிலையில், ஈழத்தமிழருக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான தமிழர் தரப்பின் முயற்சிகள் அரசியல் மட்டங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய முயற்சிகள் ஒரு புறத்தில் நடந்து கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீர் விடுதலை இயக்கத்துக்கும், ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் முடிச்சுப் போடப்படுவது எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இது இந்தியாவுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையிலான உறவுகளை சீரமைக்கும் வழிகளை அடைத்து விடக் கூடியது. அதுபோலவே, தமிழ்நாடு அரசும், எங்கோ வடக்கில் உள்ள ஒரு பிரிவினைவாத அமைப்பின் செயற்பாடுகளால், தனது மாநிலத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்படுவதை
போராட்டத்தை திசைதிருப்ப முனைகிறதா தமிழ்நாடு?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.