வங்கிகளில் வாங்கிய கடனுக்காக முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் விஜய் மல்லையா தெரிவித்தார்.
ரூ.9 ஆயிரம் கோடி கடன்
பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா, தனது நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடனாக வாங்கினார். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வங்கிகள் கூட்டமைப்பு புகார் செய்தது. இதையடுத்து விஜய்மல்லையா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு பல்வேறு கோர்ட்டுகள் ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது வாரண்டுகளையும் பிறப்பித்து உள்ளன.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், குரியன் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நடந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, விஜய்மல்லையா மார்ச் 2–ந்தேதியே நாட்டை விட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார்.
திருப்பித் செலுத்த தயார்
இந்த நிலையில் விஜய்மல்லையா மீதான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருடைய கிங்பிஷர் விமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் மூடிய உறை ஒன்றை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.9 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடியை 2 தவணைகளாக வருகிற செப்டம்பர் மாதம் 30–ந்தேதிக்குள் வங்கிகளின் கூட்டமைப்புக்கு திருப்பிச் செலுத்த விஜய்மல்லையா தயாராக இருப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். இதன் நகல் வங்கிகளின் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டும் உள்ளது. எனவே இந்த பரிந்துரையை வங்கிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
பதில் அளிக்க உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள் இருவரும், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, விஜய்மல்லையா அளித்துள்ள உறுதிமொழி குறித்து ஒருவாரத்துக்குள் பதில் அளிக்கும்படி கூறி வழக்கு விசாரணையை வருகிற 7–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.