Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

139 என்ற எண்ணுக்கு அழைத்தால் போதும் போன் மூலமாக ரெயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி அடுத்த மாதம் முதல் அமல்


ரெயில் டிக்கெட்டை போன் மூலம் ரத்து செய்யும் புதிய வசதி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் அமலுக்கு வருகிறது.
பயணிகள் சிரமம்
ரெயில் டிக்கெட் எடுப்பதில் இடைத்தரகர்களை ஒழிக்கவும், கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவும் வசதியாக டிக்கெட் பணத்தை திரும்ப பெறும் வசதி கடுமையாக்கப்பட்டது. அதன்படி டிக்கெட் ரத்து செய்யும் கட்டணத்தை ரெயில்வே அமைச்சகம் இரட்டிப்பாக்கியது. இதனால் இடைத்தரகர்கள் பிரச்சினை ஓரளவு குறைக்கப்பட்டது.
எனினும் டிக்கெட்டை ரத்து செய்யும் உண்மையான பயணிகள் பணத்தை திரும்ப பெறுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்தனர். ரெயில்வே அறிவித்துள்ள நேரத்துக்குள் டிக்கெட் கவுண்ட்டர்களில் சென்று பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் இருப்பதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
‘ஒன் டைம் பாஸ்வேர்டு’
எனவே ரெயில் டிக்கெட் ரத்து செய்யும் முறையை எளிமையாக்குவது குறித்து ரெயில்வே அமைச்சகம் பரிசீலித்தது. அதன்படி தற்போது போன் மூலம் டிக்கெட் ரத்து செய்யும் முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ‘139’ என்ற எண் வழங்கப்பட்டு உள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த எண்ணுக்கு அழைத்து தங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம்.
இந்த புதிய முறைப்படி 139 என்ற எண்ணுக்கு போன் செய்து, தாங்கள் ரத்து செய்யும் டிக்கெட் பற்றிய முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும். உடனே பயணிக்கு ஒரு கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படும். அதை அன்றைய தினமே ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் இருக்கும் ஊழியர்களிடம் கூறி, டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம்.
ஏப்ரல் 2–வது வாரம்
இந்த புதிய விதிமுறைக்கான மென்பொருள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–வது வாரத்தில் இருந்து இந்த முறை அமலுக்கு வரும் எனவும் ரெயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
டிக்கெட் கவுண்ட்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே இந்த புதிய முறை மூலம் ரத்து செய்யப்பட முடியும். ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய, ஆன்லைனிலேயே வசதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.